ADDED : அக் 23, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பஸ் ஸ்டாண்டில் கடைகளுக்கு வைக்கப்பட்ட மின்மீட்டர்கள் மழையில் நனைவதால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருவாடானை பஸ் ஸ்டாண்டில் கடைகளுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு மின் மீட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த மின் மீட்டர்கள் சுவற்றில் வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது நனைவதால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
மின் மீட்டர்களில் பெட்டிகளில் உள்ள சிறிய விரிசல்கள் மற்றும் துளைகள் வழியாக மழை நீர் ஊடுருவி மின்கம்பிகளை நனைத்து மின்சார பேனல்களுக்குள் தண்ணீரை கொண்டு செல்லும். இதனால் விபத்துகள் ஏற்படலாம். எனவே மழையில் நனையாத வகையில் இந்த மின் மீட்டர்களை பாதுகாக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.