/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படாத சுகாதார வளாகங்கள் துாய்மை இந்தியா திட்டம் என்ன ஆச்சு...

ADDED : ஜன 20, 2025 07:27 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் சுகாதார வளாகங்கள் செயல்படாத நிலையில் துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியனது.
பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் ஒன்றியங்களில் பல நுாறு கிராமங்கள் உள்ளது.
இப்பகுதியில் தனி நபர் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதுடன், பொது கழிப்பறைகள் ஏராளமாக உள்ளது. தனிநபர் கழிப்பறைகளை கட்ட மக்களை வலியுறுத்தும் அரசு, பொது கழிப்பறைகளை பராமரிக்காமல் விட்டுள்ளனர்.
இதன்படி சுகாதார வளாகங்கள் கட்டும் போதே அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் முறைப்படுத்தப்படாமல் விட்டதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல சுகாதார வளாங்களில் ஆழ்குழாய் தண்ணீர் இன்றி உள்ளதால் கழிப்பறை மற்றும் தளங்கள் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி துாய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த பல கோடி ரூபாய் ஒதுக்கி வருகிறார். ஆனால் சுகாதார வளாகங்களை முறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் அல்லது ஒன்றிய, ஊராட்சி தலைவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட்டனர்.
எனவே வரும் நாட்களில் சுகாதார வளாகங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.