/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் புது பஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வருவது எப்போது...முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் ஜவ்வாய் இழுத்தடிப்பு

ADDED : அக் 08, 2025 01:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ரூ.20 கோடியில் விரிவாக்க பணிகள் முடிந்து அக்.,3ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து 5 நாட்களாகியும் இன்னும் பஸ் போக்குவரத்து துவங்கவில்லை. குறைந்த இடவசதியுள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இயக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பயணிகள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டது. கட்டடம் சேதம், போதிய இடவசதியின்மையால் 2023 ஆக.,3 ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16,909 சதுர அடியில் கட்டுமான பணிகள் துவங்கியது.
ஓராண்டில் முடிக்க வேண்டிய விரிவாக்கப்பணிகள் ஜவ்வாய் இழுத்தது. அதன் பின் பணிகள் முடிந்து ராமநாதபுரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அக்.,3ல் திறந்து வைத்தார். அதன் பிறகு பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடநெருக்கடியால் கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன. குடிநீர், கழிப்பறை போதுமான அளவில் இல்லை. பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும் போது ரயில்வே பீடர் ரோட்டில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களை இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் பயணிகள் அமர தரமான இருக்கை வசதிகள், குடிநீர், கூடுதல் கழிப்பறை வசதிகளை புதிய பஸ்ஸ்டாண்டில் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகள் அமைக்கும் பணி நடக்கிறது. பணிகள் முடிந்து ஓரிரு நாட்களில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். --