/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் நெற்பயிர்களை அழித்த காட்டுப்பன்றிகள்; விவசாயிகள் கவலை

ADDED : டிச 26, 2024 04:40 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நீர்குன்றம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வளர்ந்துள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் அருகே பொசுக்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நீர்குன்றம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500 ஏக்கருக்கு அதிகமான பகுதியில் நெல் விவசாயம் செய்துள்ளனர். தற்போது பருவம் தவறி பெய்த மழையால் முதுகுளத்துார் வட்டாரத்தில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் அருகே நீர்குன்றம் கிராமத்தில் செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோன்று தொடர்ந்து இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.