/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய்களை ஏவி வன உயிரின வேட்டை ரோந்து நடவடிக்கை தேவை
/
நாய்களை ஏவி வன உயிரின வேட்டை ரோந்து நடவடிக்கை தேவை
நாய்களை ஏவி வன உயிரின வேட்டை ரோந்து நடவடிக்கை தேவை
நாய்களை ஏவி வன உயிரின வேட்டை ரோந்து நடவடிக்கை தேவை
ADDED : அக் 31, 2024 01:11 AM
சிக்கல்: வேட்டை நாய்களை பயன்படுத்தி புள்ளி மான், முயல், நரி, உடும்பு உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் போக்கு அதிகரித்துள்ளதால் ரோந்து நடவடிக்கை தேவை.
சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கண்மாய் கரையோரங்கள், வாலிநோக்கம், சாயல்குடி மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராமங்கள் மற்றும் உத்தரகோசமங்கை வனப்பகுதிகளில் அதிகளவு வன உயிரினங்கள் காணப்படுகின்றன.
ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டுள்ள ஏராளமான புள்ளி மான்கள் மற்றும் அரிய வகை வன உயிரினங்கள் வேட்டையாடும் கும்பலால் பாதிக்கப்படுகின்றன. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
சாயல்குடி, சிக்கல், உத்தரகோசமங்கை உள்ளிட்ட கண்மாய் பகுதிகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் உள்ள அரியவகை பறவைகள், வன விலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வனத்துறையினர் ஏற்படுத்த வேண்டும்.
இரவு நேரங்களில் வேட்டை நாயை பயன்படுத்தி வேட்டையாடும் மர்ம கும்பல்களால் இவற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கையை எடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்றனர்.