/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரவு நேர ரிப்லைட்டர், ஒளிரும் பல்புகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
இரவு நேர ரிப்லைட்டர், ஒளிரும் பல்புகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
இரவு நேர ரிப்லைட்டர், ஒளிரும் பல்புகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
இரவு நேர ரிப்லைட்டர், ஒளிரும் பல்புகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : ஜன 29, 2024 11:50 PM
ராமநாதபுரத்தில் இருந்து துாத்துக்குடி செல்லும் வழியில் திருப்புல்லாணி, சிக்கல், சாயல்குடி, கீழக்கரை ஆகிய இடங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் ரிப்லைட்டர் மற்றும் ஒளிரும் பல்புகள் இல்லை.
இதனால் மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட புல்லாந்தை அருகே கடந்த ஜன.9ல் கர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 49 பேர் சபரிமலைக்கு பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியில் சரக்கு லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக டூரிஸ்ட் பஸ் மோதி விபத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இதே போன்று தொடர்ந்து கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் தார்ப்பாய் விரிக்கப்பட்ட நிலையில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கடந்து செல்கின்றன.
பெரும்பாலானோர் சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றனர். ஒளிரும் தன்மை கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாமல் இருள் சூழ்ந்த பகுதியில் நிறுத்தி வைப்பதால் பின்னால் அல்லது முன்னால் வரக்கூடிய வாகனங்களுக்கு எந்த எச்சரிக்கை விழிப்புணர்வும் இல்லாததால் மோதி விபத்தை சந்திக்கின்றனர்.
எனவே கீழக்கரை, சாயல்குடி போலீசார் இது போன்ற லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இரவு நேர ரிப்லைட்டர் மற்றும் ஒளிரும் பல்புகளை ஒளிரச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.