/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினத்தில் துணை மின்நிலையம் அமைக்கப்படுமா: மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 17, 2025 11:11 PM
தொண்டி:எஸ்.பி.பட்டினத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன், ஓரியூர், கலியநகரி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கு வழங்கப்படும் மின்விநியோகம் சீரானதாக இல்லை. குடியிருப்புகள் அதிகமாகி வருவதால் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அடிக்கடி உள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வாக எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். எஸ்.பி. பட்டினம் மக்கள் கூறியதாவது:
மாவட்டத்தின் கடைசி எல்லையில் இந்த நான்கு ஊராட்சிகள் உள்ளன. அடிக்கடி மின்தடை, குறைவழுத்த மின்சாரம் என பல்வேறு வகைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனால் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை இல்லை. இத்திட்டம் செயல்படும் பட்சத்தில் ஏராளமான கிராம மக்கள் பயனடைவார்கள். எனவே துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.