/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோஆப் டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர்களுக்கு கை கொடுக்குமா
/
கோஆப் டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர்களுக்கு கை கொடுக்குமா
கோஆப் டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர்களுக்கு கை கொடுக்குமா
கோஆப் டெக்ஸ் நிறுவனம் கைத்தறி நெசவாளர்களுக்கு கை கொடுக்குமா
ADDED : செப் 23, 2024 02:34 AM
பரமக்குடி: -கோஆப் டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி ஜவுளி களை விற்பனை செய்யும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க, விழாக்கால தள்ளுபடி பெயரளவில் இல்லாமல்முழுமையாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான கடன் அட்டை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு காட்டன், பம்பர், பட்டு, துண்டு, ஜமுக்காளம், சேலை, வேட்டிகள் விற்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கோஆப் டெக்ஸில் கைத்தறி துணி ரகங்கள் விற்பது குறைந்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் வரை சிறு நகரங்களில் மிகப்பெரிய ஜவுளி விற்பனை நிறுவனமாக கோஆப் செயல்பட்டது. விழாக்காலங்களில் அரசு அலுவலர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் மற்றும் தள்ளுபடி முழுமையாக கிடைத்தது.
நெசவாளர்களுக்கு உற்பத்தி திட்டத்தை அறிவித்து வாழ்வாதாரம் காக்கப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளி, பொங்கல் நேரத்தில் 30, 50 சதவீதம் என தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை முழுமையாக அமல்படுத்துவது இல்லை. கோஆப் டெக்ஸ் நிறுவனங்கள் சம்பிரதாயமாகவே செயல்படுகின்றன.
இதுகுறித்து பரமக்குடியை சேர்ந்த பாரதிய மஸ்துார் சங்கம் மாநில கைத்தறி பேரவை பொருளாளர் காசி விஸ்வநாதன் கூறியபோது:
நெசவாளர்களை பாதுகாக்க கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தன் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு விழாக்கால கடன் அட்டை திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி அறிவிக்கும் தள்ளுபடியை முழுமையாக வழங்க வேண்டும். அனைத்து கைத்தறி ரகங்களை விற்று வாடிக்கையாளர்களை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.