/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீயணைப்பு நிலையம் தொண்டியில் அமையுமா
/
தீயணைப்பு நிலையம் தொண்டியில் அமையுமா
ADDED : செப் 25, 2025 03:24 AM
தொண்டி: தொண்டியில் நாளுக்கு நாள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எஸ்.பி.பட்டினம் முதல் காரங்காடு வரை நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட இப்பகுதியில் சாலை, தீ விபத்து, நீரில் மூழ்குவோரை மீட்பது போன்ற பல்வேறு மீட்பு பணிக்காக திருவாடானையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டும்.
எஸ்.பி.பட்டினம், காரங்காடு போன்ற கிராமங்கள் திருவாடானையில் இருந்து 40 கி.மீ.,ல் உள்ளது. இதனால் விபத்து சமயத்தில் மீட்பு பணிகள் மிகவும் தாமதாகிறது.
இது குறித்து தொண்டி மாலிக் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை பகுதியாக இருப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. திருவாடானை தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்கு அதிக நேரமாவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே தொண்டியை மையமாக வைத்து புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.