/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ரோட்டோரம் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உயர் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படுமா

ADDED : பிப் 13, 2025 06:41 AM

பரமக்குடி: பரமக்குடி தாலுகாவில் ராமநாதபுரம் மாவட்ட எல்லை தொடங்கி முடியும் வரை தேசிய நெடுஞ்சாலை உட்பட நகர், கிராமப் பகுதிகளில் கொடிக் கம்பங்கள் ஏராளமாக உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி அகற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கொடிக்கம்பம் குறித்த வழக்கு ஒன்றில் ஜன.28ல் வெளியான செய்திகளின் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மதக் கொடி கம்பங்கள் உள்ளிட்டவற்றை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பரமக்குடி நகராட்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் நகரில் ஏராளமான கொடிக் கம்பங்கள் இருக்கிறது.
மேலும் பார்த்திபனூர் எல்லை துவங்கி சத்திரக்குடி வரை ஆங்காங்கே அரசியல் கட்சியினர் பல அடி உயரத்திற்கு கம்பங்களை நட்டுள்ளனர்.
எனவே உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது இடத்தில் உள்ள கொடி கம்பங்களை வருவாய்த் துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்படி, பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலுடன் அனுமதி பெற வேண்டும்.
மேலும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும், என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.