/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலட்டாறு பகுதியில் சேதமடைந்து வீணாக வெளியேறும் காவிரி குடிநீர் பராமரிப்பு பணிகளை செய்வார்களா

ADDED : ஜூன் 17, 2025 11:14 PM

சாயல்குடி: சாயல்குடி அருகே மலட்டாறு பகுதியில் வீணாக பல நாட்களாக காவிரி குடிநீர் வெளியேறி அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.
சாயல்குடி பேரூராட்சியில் வாரம் ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டு குடிநீர் பெருவாரியான கிராமங்களில் மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மலட்டாறு பழைய பாலம், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம், இருவேலி செல்லும் சாலை ஆகியவற்றில் மாதக்கணக்கில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் வாட்ஸ்ஆப் மூலமாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் தொடர் மெத்தனப் போக்கை கையாண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
சாயல்குடியைச் சேர்ந்த பாஸ்கரன் கூறியதாவது: குடிநீர் வாரிய அதிகாரிகள் முறையாக சேதமடைந்த இடங்களை ஆய்வு செய்து அவற்றில் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும்.
தண்ணீர் அதிகளவு வீணாக வெளியேறுவதால் அப்பகுதியில் குளம்போல் தேங்குகிறது. மாதாந்திர பராமரிப்புக்கான குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது.
அவற்றைக் கொண்டு முறையாக சீரமைக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் தேங்கிய கழிவு நீர் குறித்த விபரங்களுடன் கலெக்டரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.