/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் உரிமை தொகை கிடைக்குமாபதில் தெரியாமல் பெண்கள் தவிப்பு
/
மகளிர் உரிமை தொகை கிடைக்குமாபதில் தெரியாமல் பெண்கள் தவிப்பு
மகளிர் உரிமை தொகை கிடைக்குமாபதில் தெரியாமல் பெண்கள் தவிப்பு
மகளிர் உரிமை தொகை கிடைக்குமாபதில் தெரியாமல் பெண்கள் தவிப்பு
ADDED : ஜன 09, 2025 04:53 AM
திருவாடானை: தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொண்டி அருகே பாசிபட்டினத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.
கிராமத்தை சேர்ந்த பாசியம்மன், கலா, தங்கம்மாள் ஆகியோர் கூறியதாவது:
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் கிடைக்கவில்லை. எங்களது விண்ணப்பம் ஏற்கபட்டதா, நிராகரிக்கபட்டதா என்ற விபரம் தெரியவில்லை. நேற்று தாலுகா அலுவலகத்திற்கு சென்று முறையிட்டோம்.
அலுவலர்கள் தகவல் தெரிவிக்கிறோம் என்கின்றனர். பல நாட்களாக தாலுகா அலுவலகத்திற்கு அலைவதாக தெரிவித்தனர்.