/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டும் பெண்கள்
/
மகளிர் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டும் பெண்கள்
ADDED : ஆக 02, 2025 11:02 PM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியம் களிமண்குண்டு ஊராட்சி குத்துக்கல் வலசையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.
இதில் 16 துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கீழக்கரை தாசில்தார் ஜமால் முகமது முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., விஜயகுமார் வரவேற்றார்.
ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, களிமண்குண்டு வி.ஏ.ஓ., மாரிமுத்து, ஊராட்சி செயலர் ஜெயசுந்தரி உட்பட ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் உங்களிடம் ஸ்டாலின் குறித்த விண்ணப்ப மனுக்களை வழங்கி பூர்த்தி செய்து அவற்றை கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்தனர்.
ஒவ்வொரு துறை சார்பிலும் தனித்தனியாக கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு அவற்றில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிகளவு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் 600க்கும் அதிகமாக பெறப்பட்டது.