/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறந்த சேவைபுரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
சிறந்த சேவைபுரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த சேவைபுரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த சேவைபுரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 27, 2025 06:26 AM
ராமநாதபுரம்: உலக மகளிர் தின விழாவில் (மார்ச் 8) பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2025---26ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பெண்கள் டிச.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்த்தல், மொழி, இனம் பாகுபாடின்றி கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள பெண்கள் விண்ணப்ப விபரங்களை தமிழக அரசின் இணைய தளத்தில் https://awards.tn.gov.in பதிவு செய்ய வேண்டும். உரிய கருத்துருவுடன் ராமநாத புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ், ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு 04567--230 466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்து உள்ளார்.

