/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா
/
தி.மு.க., சார்பில் மகளிர் தின விழா
ADDED : மார் 10, 2024 04:08 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, மகளிர் தின விழா, மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர் முகமது சலாவுதீன் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் அணித்தலைவர் ராஜகோபால், துணைத்தலைவர் பத்மநாபன், துணை அமைப்பாளர் நாகரத்தினம், இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
சிறப்பு அன்னதான திட்டத்தையும் துவக்கி வைத்தார். மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவிதா, நகராட்சித் தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.---------

