/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நீதிமன்றம் முன் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மறியல்; கடனை திருப்பி செலுத்தியதில் பிரச்னை
/
பரமக்குடி நீதிமன்றம் முன் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மறியல்; கடனை திருப்பி செலுத்தியதில் பிரச்னை
பரமக்குடி நீதிமன்றம் முன் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மறியல்; கடனை திருப்பி செலுத்தியதில் பிரச்னை
பரமக்குடி நீதிமன்றம் முன் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மறியல்; கடனை திருப்பி செலுத்தியதில் பிரச்னை
ADDED : செப் 18, 2025 10:53 PM

பரமக்குடி; பரமக்குடி மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் நிதி நிறுவனத்தில் கடனை திரும்ப செலுத்திய தில் ஏற்பட்ட பிரச்னையால் நீதிமன்றம் முன் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் நல அறக்கட்டளை என செயல்பட்டு வருகிறது. இதில் பெண்களை குழுக்களாக இணைத்து பல்வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தரப்படுகிறது.
இதன்படி பரமக்குடி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழுக்களுக்கு சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று தரப்பட்டுள்ளது. 2020, 22ம் ஆண்டுகளில் ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து பலரும் பணத்தை முறையாக செலுத்தாததால் பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குழுவை நிதி நிறுவனத்தினர் அணுகியுள்ளனர். இதன்படி செப்.,4ல் 170க்கும் மேற்பட்ட கடன் பெற்ற பெண்களுக்கு செப்.,18ல் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சட்டப்பணிகள் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் நீதிமன்றம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் முறையாக பணம் செலுத்தி உள்ளதாகவும், எங்களுக்கு ரசீது தரப்படவில்லை. மேலும் சம்பந்தப் பட்ட குழுவை நடத்துவோர் பணம் கட்டியதாக எழுதி வைத்துக்கொண்ட னர். ஆகவே இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என கூறினர்.
இதனை நிதி நிறுவனத்தினர் ஏற்காத சூழலில் பெண்கள் நீதிமன்றம் முன் இளையான்குடி ரோட்டில் அரை மணி நேரம் வரை மறியல் செய்தனர்.
பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நோட்டீஸில் உள்ளபடி பணம் கட்ட வேண்டும். பணம் கட்டியதில் ஏமாற்றப்பட்டதாக இருந்தால் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றனர்.
இதையடுத்து பெண்கள் கலெக்டரிடம் சென்று முறையிடுவோம் எனக் கூறி சென்றனர். கடனை திரும்ப செலுத்தியும் வரவு வைக்காததால் மாற்று இடங்களில் லோன் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத் திற்குள்ளாகி உள்ளோம் என பெண்கள் தெரிவித்தனர்.