நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கையை சேர்ந்தவர் செந்துாரான் 47. ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். பிப்.22ல் மகனுக்கு காதணி விழா வைத்திருந்தார்.
இதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற போது ஏனாதி விலக்கு ரோட்டில்செந்துாரன் இறங்கியுள்ளார். அங்கிருந்து பூங்குளம் அருகே சாலையோர புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
* தொண்டி அருகே தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் 51. மனைவியுன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார்.
கண்ணன் மகள் சூரியபிரபா 23, புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

