UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சக்கரக்கோட்டை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி 58.
கடல் வேலைக்கு சென்று வந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மனநல சிகிச்சையை தொடராமல் அடிக்கடி மது அருந்தியதை மனைவி சத்யா கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக சத்யா தனது மகளுடன் ஆர்.காவனுாரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட வேலுச்சாமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
