/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலி கருப்பட்டி ஆதிக்கத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு
/
போலி கருப்பட்டி ஆதிக்கத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு
போலி கருப்பட்டி ஆதிக்கத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு
போலி கருப்பட்டி ஆதிக்கத்தால் தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : ஆக 22, 2025 12:43 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் பாரம்பரிய முறையில் பதனீரில் கருப்பட்டி தயாரிக்கும் பணி நடக்கிறது. அதே சமயம் போலி கருப்பட்டிகள் ஆதிக்கத்தால் சீசன் இல்லாததால் இருப்பு வைத்தும் எதிர்பார்த்த விலையும், விற்பனையின்றி பனைத் தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பனை மரங்கள் அதிகமாக உள்ளன. பனை ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர்.
தற்போது கருப்பட்டி சீசன் துவங்கியுள்ளது, சாயல்குடி, மாரியூர், கன்னிராஜபுரம், மேலக்கிடாரம், பனைக்குளம், முத்துபேட்டை, அழகன்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை தரத்திற்கு ஏற்ப வாங்கி வெளி மார்க்கெட்டில் ரூ.280 முதல் ரூ.300 விற்கின்றனர்.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த பனைத்தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் ஆத்தி கூறியதாவது:
பனை மரத்தில் பதனீர் இறக்கி குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு கலந்து பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம். ஏப்., முதல் ஜூலை வரை சீசன். ஆனால் சர்க்கரை கலந்த கருப்பட்டி ஆதிக்கம் காரணமாக மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால் எதிர்பார்த்த விலையின்றி முதலீட்டை இழந்து வாங்கிய கடனை அடைக்க சிரமப்படுகிறோம்.
சீசன் இல்லாத போது கிலோ ரூ.300க்கு விலைபோகும். நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் போலி கருப்படி கிலோ ரூ.150 முதல் ரூ.200க்கு விற்கின்றனர். எனவே கலப்பட கருப்பட்டியை ஒழிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.