ADDED : அக் 17, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் தரவு பட்டியலை எஸ்.பி.எஸ்.எஸ்., மென்பொருளைக் கொண்டு பகுப்பாய்வு செய்தல் என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிற்சி பட்டறை நடந்தது.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் மனோஜ் பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை கணினித் துறை தலைவர் ஜேசுதுரை, தரவு அறிவியல் துறை தலைவர் பிரபாவதி, தினேஷ்குமார் செய்திருந்தனர். ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. படக் காட்சிகள் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

