/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயிலில் சக்தி கரகம் எடுத்து வழிபாடு
/
திரவுபதி அம்மன் கோயிலில் சக்தி கரகம் எடுத்து வழிபாடு
திரவுபதி அம்மன் கோயிலில் சக்தி கரகம் எடுத்து வழிபாடு
திரவுபதி அம்மன் கோயிலில் சக்தி கரகம் எடுத்து வழிபாடு
ADDED : ஜூலை 28, 2025 03:44 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஜூலை 25 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பெத்தார் தேவன் கோட்டை கிராமத்தார்கள் சார்பில், சக்தி கரகம் எடுத்தும் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தினமும் இரவில், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ண கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தபசு கடபலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று, ஆக.15ல் முக்கிய விழாவான பூக்குழி விழா நடக்கிறது. ஆக.17ல் மஞ்சள் நீராட்டுதல், ஆக.19 ல் பட்டாபிஷேகம் நடைபெற்று, விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழு, ஹிந்து பேரவை நிர்வாகிகள் செய்கின்றனர்.