/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டேராடூன் ராணுவக் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்
/
டேராடூன் ராணுவக் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவக் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவக் கல்லுாரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 14, 2025 06:35 AM
ராமநாதபுரம்: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரியில் சேர 13 வயது பூர்த்தி ஆகாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரியில் 2026 ஜன., பருவத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 2026 ஜன.,1ல் பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
அதாவது 2013 ஜன.,2க்கு முன்னதாகவும் 2014 ஜூலை 7க்கு பிறகும் பிறந்திருக்கக்கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவர் அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஜூன் 1 ல் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை 'கமாண்டன்ட்' ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன் கர்ஹிகான்ட், உத்ரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண்: 248003” என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து கமான்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரி டேராடூன், உத்ரகாண்ட் டேராடூன், எச்.டி.எப்.சி. வங்கி பல்லுாபூர் சவுக,டேராடுன் (வங்கிக் குறியீடு-1399) உத்தரகாண்டில் செலுத்தத் தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ஜாதிச்சான்றுடன் ரூ.555க்கான வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் (இரட்டை பிரதிகளில்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு மார்ச் 31 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விபரங்களை அறிய www.rimc.gov.in என்ற இணையதள முகவரியிலும் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல இயக்குநர் அலுவலகத்தை 04567--230 045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

