/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தொகுதியில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் மனு
/
திருவாடானை தொகுதியில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் மனு
திருவாடானை தொகுதியில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் மனு
திருவாடானை தொகுதியில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் மனு
ADDED : நவ 19, 2024 05:07 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் நடந்த சிறப்பு முகாம்களில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்க்க ஆர்வமுடன் மனுக்கள் அளித்தனர். சுருக்கமுறை திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்தங்களுக்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் கமிஷன் ஜன.1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்கவும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், நீக்கம் செய்யவும் முகாம்களை நடத்த உத்தரவிட்டது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் நவ.16, 17ல் சிறப்பு முகாம் நடந்தது. தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை தொகுதியில் 247 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஜன.1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர் அனைவரையும் தவறாமல் பட்டியலில் இணைக்கும் வகையில் நவ.16, 17 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது.
இதில் 567 இளம் வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற விண்ணப்ப மனுக்கள் கொடுத்தனர். விடுபட்டவர்கள் நவ.23, 24ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றனர்.

