/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாண்டில் போட்டு மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
/
துாண்டில் போட்டு மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
துாண்டில் போட்டு மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
துாண்டில் போட்டு மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
ADDED : பிப் 15, 2024 05:07 AM
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் அதிகளவு பருவமழையால் பெரும்பாலான கண்மாய், குளங்கள் நிரம்பி தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பட பல்வேறு சிறிய கண்மாய்களுக்கும் வைகை அணை நீர் சென்ற தால் பெரும்பாலான கண்மாய்களுக்கு ஆற்றுத் தண்ணீரில் அதிக மீன்கள் சென்றன.
இந்த நிலையில் தொடர்ந்து கண்மாயில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மீன்கள் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் கண்மாய் குளங்களில் உள்ள மீன்களை இளைஞர்கள் துாண்டில் மூலம் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயிலிருந்து விவசாயம் நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால், தண்ணீர் தேங்கியுள்ள சிறிய குளங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளிலும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை துாண்டில் மீன் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.