ADDED : பிப் 17, 2024 10:56 PM
தொண்டி: தொண்டி அருகே 130 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
சின்னத்தொண்டி கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் 130 கிலோ கஞ்சா மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அந்த கஞ்சா மூடைகளை தொண்டி போலீசார் கைப்பற்றி ஏற்கனவே 13 பேரை கைது செய்தனர்.
சம்பவம் கடந்த ஆண்டு அக்.3ல் நடந்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக சிவகங்கை மாவட்டம் செலுகையை சேர்ந்த கவுதம் 28, சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை நேற்று தொண்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
கஞ்சா கடத்தலில் முக்கிய நபர்கள் சம்பந்தபட்டிருக்கிறார்களா, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் கவுதமிடம் விசாரணை செய்தனர்.