/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோ டிரைவர் கொலையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
ஆட்டோ டிரைவர் கொலையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : நவ 01, 2025 03:09 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமாரை கொலை செய்த வழக்கில் ராமகிருஷ்ணனுக்கு 27, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் நொச்சிவயல் சேதுபதிநகரைச் சேர்ந்த பாக்கியம் மகன் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் 40.
அதே பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மகன் ராமகிருஷ்ணன் 27. இவர் ரவிக்குமாரின் ஆட்டோ கண்ணாடியை சேதப்படுத்தியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக 2023 ஏப்ரலில் ரவிக்குமாருடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி ராமகிருஷ்ணன் கொலை செய்தார்.
ராமகிருஷ்ணனை ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. ராமகிருஷ்ணணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மெகபூப் அலிகான் தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

