நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, உறுதிக்கோட்டை பாரதி 28, கட்டடத் தொழிலாளி. திருவாடானை கல்லவிழியேந்தலில் கொட்டகை பணிக்காகச் சென்றிருந்தார்.
அங்குள்ள கண்மாய்க்குள் இறங்கி நீர் ஏற்றும் மோட்டாரில் பைப் இணைப்புகளைச் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது பாரதி நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்பதற்குள் மூச்சுத் திணறி இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த பாரதிக்கு திருமணம் ஆகவில்லை.

