தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுகேரளாவில் பதுங்கிய வாலிபர் கைது

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுகேரளாவில் பதுங்கிய வாலிபர் கைது

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுகேரளாவில் பதுங்கிய வாலிபர் கைது


ADDED : செப் 25, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரணபலி முருகன் கோயில் கும்பாபிஷேகம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கச் செயின் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். 

ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள ரணபலி முருகன் கோயிலில் செப்.,7 ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெருவயலை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி முனீஸ்வரி 38, அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாதவர்கள் பறித்து சென்றனர்.  ஜெயக்குமார் அங்கிருந்தவர்களை விசாரித்த போது கோவை மாவட்டம் போத்தனுாரை சேர்ந்த வசந்தி திருடியது தெரிய வந்தது. மேலும் வசந்தியின் சகோதரி சரசு மற்றும் சரசு மகன் சரண்யா ராஜ் 32, ஆகியோர் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தேவிப்பட்டினம் போலீசார் விசாரணையில், வயர் கட்டர் கருவி மூலம் முனீஸ்வரி கழுத்தில் இருந்த செயினை அறுத்துள்ளனர். அதில் கிடைத்த பாதி செயினை சரண்யா ராஜிடம் கொடுத்த நிலையில் அவர் தலைமறைவானார்.  அதே போல் விழாவில் திருப்பாலைக்குடியை சேர்ந்த குப்பு மனைவி மலர் 50, அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினும் காணாமல் போனது. இந்த திருட்டு வழக்குகள் குறித்து தேவிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான சரசு மற்றும் சரண்யா ராஜை தேடி வந்தனர்.  இந்நிலையில் சரண்யா ராஜ் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. கேரளா விரைந்த தனிப்படை போலீசார் சரண்யா ராஜை கைது செய்தனர். திருடிய செயினை உருக்கி தங்க காசுகளாக மாற்றியுள்ளார். அவரிடம் இருந்து 44 கிராம் எடையுள்ள தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us