தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மண்டல குத்துசண்டை மாணவர்கள் வெற்றி

மண்டல குத்துசண்டை மாணவர்கள் வெற்றி

மண்டல குத்துசண்டை மாணவர்கள் வெற்றி


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஷேக் ஹாலித் ஹசன், முகமது ஜாவித் அக்தர் ஆகியோர் மதுரையில் நடந்த மண்டல அளவிலான குத்துசண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் வாரியர்ஸ் ஜிம்மில் பயிற்சி பெற்ற செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர். சேக் ஹாலித் ஹசன் 17, ( 42-44 கிலோ) ஆர்.முகமது ஜாவித் அக்தர் 15, (36--38 கிலோ) பிரிவுகளில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர். இருவரும் மாநில குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us