/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி
/
ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி
ADDED : மே 16, 2024 09:25 PM

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய காப்புக்காட்டிலுள்ள மான்கள், குடிநீர் மற்றும் இரை தேடி, குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.
இவ்வாறு நேற்று அதிகாலை, மேல்பாக்கம் - அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில், 3 மான்கள் சென்றது, அப்போது, அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.
அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த மான்களின் உடல்கள் அரக்கோணம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின் அப்பகுதியில் தீயிட்டு எரித்தனர்.
கோடைக்காலத்தில் நீருக்காக மான்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு இறப்பது தொடர்வதால், தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

