/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கன்டெய்னர் லாரி மோதி எஸ்.எஸ்.ஐ., பலி
/
கன்டெய்னர் லாரி மோதி எஸ்.எஸ்.ஐ., பலி
ADDED : ஜூலை 18, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், பிஞ்சி பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி, 59; கடந்த, 1985 ம் ஆண்டு போலீசில் சேர்ந்த அவர் தற்போது, காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று பணிக்கு செல்ல காலை, 9:30 மணிக்கு, ராயல் என்பீல்ட் புல்லட்டில், ஹெல்மெட் அணிந்து கொண்டு, ராணிப்பேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்றார். வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல், தேசிய நெடுஞ்சாலை அருகே, பின்னால் கிருஷ்ணகிரியிலிருந்து, சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, புல்லட் மீது மோதியது. இதில், பிச்சாண்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
வாலாஜபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.