/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பாதுகாப்பு படை வீரர் பயிற்சி நிறைவு விழா
/
பாதுகாப்பு படை வீரர் பயிற்சி நிறைவு விழா
ADDED : ஆக 18, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது.
இங்கு 49-வது படை பிரிவுகளுக்கான கான்ஸ்டபிள் பயிற்சியை 523 பெண்கள், 216ஆண்கள் என மொத்தம் 739 பேர் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று நிறைவு செய்தனர். பயிற்சி நிறைவு விழா பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர் யாமினி பிரியா தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென் மண்டல தலைவர் சரவணன் பங்கேற்று வீரர் - வீராங்கனையரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பயிற்சியில் சிறந்து விளங்கிய ஆறு பேருக்கு, நினைவுப் பரிசுக் கோப்பை வழங்கினார்.

