திருமாவளவனை விமர்சித்த நா.த.க., நிர்வாகி மண்டை உடைப்பு
திருமாவளவனை விமர்சித்த நா.த.க., நிர்வாகி மண்டை உடைப்பு
ADDED : ஆக 24, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
ராணிப்பேட்டை: நா.த.க., மாநில நிர்வாகி குபேந்திரன், 38, என்பவரின் மண்டையை உடைத்த வி.சி.க., நிர்வாகிகள் நரேஷ், 35, ராஜீவ் காந்தி, 29, கோபி, 30, ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் குபேந்திரன். நாம் தமிழர் கட்சி மாநில இளைஞரணி செயலர். இவர் அண்மையில், வி.சி.க, தலைவர் திருமாவளவனை விமர்சித்து, 'யூ - டியூப்' சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த ராணிப்பேட்டை, காரையை சேர்ந்த வி.சி.க, நிர்வாகி ராஜீவ் காந்தி, நரேஷ், கோபி ஆகிய மூவர், நேற்று முன்தினம் குபேந்திரனை தாக்கி, அவரது மண்டையை உடைத்தனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, வாலஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ராணிப்பேட்டை போலீசார், ராஜீவ் காந்தி உட்பட மூவர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
