தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ நிருபர்களை அடித்து உதைத்த எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

 நிருபர்களை அடித்து உதைத்த எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

 நிருபர்களை அடித்து உதைத்த எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு


ADDED : ஆக 18, 2026 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 02:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோளிங்கர்: நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய சோளிங்கர் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., கபில், 32, மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரா ணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், கடந்த மாதம், ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, வெளியே வந்த சோளிங்கர் த.வெ.க., -- எம்.எல்.ஏ., கபில், 'யூ - டியூபர்' சிவாவை தாக்க முயன்றுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து, கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன், 30, உட்பட ஆதரவாளர்கள், ஜூலை 27ம் தேதி, சிவாவை, ஸ்டூடியோ கடைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். சம்பவம் குறித்து அறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை நிருபர்கள் அரங்கநாதன், 50, கல்யாணசுந்தரம், 70, ஆகியோரையும் தாக்கினர்.

இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை கோரி, வேலுார் டி.ஐ.ஜி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. சோளிங்கர் போலீசார், கபில், தனஞ்செழியன் மற்றும் சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us