/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பைக்குடன் மாயமான காவலாளி பூந்தமல்லி சாலையில் சடலமாக மீட்பு
/
பைக்குடன் மாயமான காவலாளி பூந்தமல்லி சாலையில் சடலமாக மீட்பு
பைக்குடன் மாயமான காவலாளி பூந்தமல்லி சாலையில் சடலமாக மீட்பு
பைக்குடன் மாயமான காவலாளி பூந்தமல்லி சாலையில் சடலமாக மீட்பு
ADDED : செப் 13, 2024 09:15 PM
அரக்கோணம்:சென்னை மணலியை சேர்ந்தவர் தினேஷ், 34 திரிபுரா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். தினேஷ் கடந்த 3 மாதங்களாக அரக்கோணம் அடுத்த அருகிலப்பாடி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக பணி செய்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன் மாலை வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையின் உரிமையாளரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக இருசக்கர வாகனத்தை வாங்கி சென்றவர் நீண்ட நேரமாக வரவில்லை.
தினேஷை அந்த பகுதி முழுதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனிடையே நேற்று காலை அரக்கோணம் -- பூந்தமல்லி சாலையில் மரத்தின் ஓரமாக உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இறந்த நிலையில் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்துடன் காணாமல் போன தினேஷ் என்பதும், பைக் மரத்தில் மோதி கால்வாயில் விழுந்து பலியானதும் தெரிந்தது.
போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.