/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் ரோப்கார் சேவை 22 நாட்கள் நிறுத்தம்
/
சோளிங்கர் ரோப்கார் சேவை 22 நாட்கள் நிறுத்தம்
ADDED : ஆக 03, 2024 10:46 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டாபளையம் பெரிய மலையில் யோக நரசிம்ம சுவாமியும், சின்னமலையில் அனுமனும் அருள்பாலிக்கின்றனர்.
திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பெரிய மலைக்கு, 1,305 படிகள் கொண்ட பாதை உள்ளது.
முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த மலைக்கோவிலுக்கு படி வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர்.
இந்த மலைக்கோவிலுக்கு, பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த மார்ச் மாதம் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் மலைக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 16ம் தேதி முதல் செப்., 6ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட உள்ளது.