/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள் வாடகைக்கு விட்ட 23 வீடுகளுக்கு 'சீல்'

ADDED : ஆக 07, 2024 12:51 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த காரையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், உள் வாடகைக்கு விடப்பட்ட, 23 குடியிருப்புகளுக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியில், அரசு ஊழியர்களுக்கான, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வசதி வாரியம் குறைந்த வாடகைக்கு வீடுகளை விட்டிருந்தது. அங்குள்ளவர்கள், அவற்றை உள் வாடகைக்கு விட்டு விட்டு, வெளியே சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் வசித்து வருவதாக புகார் சென்றது.
புதியதாக, குடியிருப்பு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, வீடுகள் வழங்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, உள் வாடகைக்கு விடப்பட்டிருந்ததை கண்டறிந்து அவர்களிடம், குடியிருப்பை காலி செய்து ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர்கள், அதை கண்டுகொள்ளாததால் , போலீஸ் பாதுகாப்புடன், அங்கிருந்த பொருட்களை வெளியேற்றி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரிகள், 23 குடியிருப்புகளுக்கு, 'சீல்' வைத்தனர்.