ADDED : மார் 14, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோளிங்கர்:சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். யோக நரசிம்ம சுவாமி மலையடிவாரத்தில் பிரம்ம தீர்த்தம் எனப்படும் தக்கான் குளம் உள்ளது.
யோக நரசிம்மர் அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு கிழக்கில் சின்னமலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். சின்னமலை அடிபாரத்தில் பாண்டவ தீர்த்தகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உரிய பராமரிப்பு மேற்கொள்ளதாததால் பிளாஸ்டிக் கழிவு மிதக்கிறது. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில் நகரமான சோளிங்கரில் சீரழியும் கோவில் குளத்தை நகராட்சி நிர்வாகம் சீராக பராமரிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.