/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மளிகைக்கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
/
மளிகைக்கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு
ADDED : மே 30, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் ராஜ்குமார், 70 என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி வீட்டு சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த 20,000 ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ராஜ்குமார் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.