/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கரில் கோவிலில் தொட்டாச்சாரியார் உற்சவம்
/
சோளிங்கரில் கோவிலில் தொட்டாச்சாரியார் உற்சவம்
ADDED : பிப் 22, 2025 01:33 AM

சோளிங்கர்:சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது.
இந்த மலைக்கோவிலுக்கு கிழக்கில், சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். பெரிய மலையில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமிக்கு கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட பாதை உள்ளது.
கூடுதலாக, ரோப்கார் வசதி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரம் பக்தர்கள் வரை ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. சோளிங்கர் பெருமாள் கோவிலில் தொட்டாச்சாரியார் உற்சவம் கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு தொட்டாச்சாரியாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.