/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரூ.1 கோடி போதை மாத்திரை கடத்திய 5 பேர் சுற்றிவளைப்பு
/
ரூ.1 கோடி போதை மாத்திரை கடத்திய 5 பேர் சுற்றிவளைப்பு
ரூ.1 கோடி போதை மாத்திரை கடத்திய 5 பேர் சுற்றிவளைப்பு
ரூ.1 கோடி போதை மாத்திரை கடத்திய 5 பேர் சுற்றிவளைப்பு
ADDED : செப் 23, 2025 06:25 AM
அரக்கோணம்; அரக்கோணம் ரயில் நிலைய பகுதியில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை கடத்திய ஐந்து பேரை, அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் அருகே சந்தேகமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்களின் பையை சோதனையிட்ட போது, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 30,000 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் அவர்கள், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த மங்கேஷ் கேதர் சஜ்வால், 50, ஷாகித் இனயதுல்லா முகம்மது, 38, தானே பகுதியைச் சேர்ந்த பிரதீப் யஷ்வந்த், 32, என, தெரிய வந்தது.
இவர்கள் மும்பையில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மாத்திரையை கடத்தி வந்துள்ளனர்.
அரக்கோணத்தில் இறங்கி, புறநகர் மின்சார ரயிலில் சென்னை செல்ல முயன்ற போது சிக்கினர். மூவரையும் கைது செய்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே போலீசார் நேற்று சந்தேகத்திற்கிடமான ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 587 போதை மாத்திரைகள் இருந்தன. ஆட்டோவில் இருந்த சென்னை ஆலந்துாரை சேர்ந்த மஸ்தான் அகமது, 35, அப்துல் ரஷீத், 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.