/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி
/
ஹீட்டர் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி
ADDED : நவ 07, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா, 60. குளிக்க சுடுதண்ணீர் வைக்க, நேற்று வீட்டில், பக்கெட் நீரில், வாட்டர் ஹீட்டரை பொருத்தி, ஸ்விட்ச் போட்டார். அப்போது கமலா மீது மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கமலா இறந்து விட்டதாகக் கூறினார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.