/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கட்டட மேஸ்திரி படுகொலை தி.மு.க., பிரமுகர் வெறிச்செயல்
/
கட்டட மேஸ்திரி படுகொலை தி.மு.க., பிரமுகர் வெறிச்செயல்
கட்டட மேஸ்திரி படுகொலை தி.மு.க., பிரமுகர் வெறிச்செயல்
கட்டட மேஸ்திரி படுகொலை தி.மு.க., பிரமுகர் வெறிச்செயல்
ADDED : ஆக 11, 2025 08:26 AM
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே பட்டப்பகலில் முன்விரோதத்தில் கட்டட மேஸ்திரியை வெட்டி கொன்ற, தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட, 4 பேர் போலீசில் சரணடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு தி.மு.க., உறுப்பினர் அஸ்வினி, 44; இவரது கணவர் சுதாகர், 48; தி.மு.க., பிரமுகர். அம்மனுார் சிந்து தியேட்டர் பகுதி அருகே வசிக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி அவினேஷ் குமார், 21; இவரது தாயாருக்கும், சுதாகருக்கும் கடந்த ஏப்.,ல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்ததால், அவினேஷ்குமார், சுதாகரிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்.,19ல், அவினேஷ்குமார் கத்தியால் வெட்டியதில், பலத்த காயமடைந்த சுதாகர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த வழக்கில் அரக்கோணம் டவுன் போலீசார், அவினேஷ்குமாரை கைது செய்தனர். தற்போது ஜாமினில் ரத்தினகிரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். கையெழுத்திட நேற்று காலை, 10:00 மணியளவில் நடந்து சென்றார். அப்போது சுதாகர் உள்ளிட்ட நான்கு பேர் அவரை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்தார். வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இந்நிலையில் சுதாகர் உள்ளிட்ட நான்கு பேரும், ரத்தினகிரி போலீசில் சரணடைந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 300 மீட்டர் துாரத்துக்குள் நடந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.