/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
போலி சான்றில் பணிக்கு சேர்ந்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு
/
போலி சான்றில் பணிக்கு சேர்ந்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு
போலி சான்றில் பணிக்கு சேர்ந்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு
போலி சான்றில் பணிக்கு சேர்ந்த 3 போலீசார் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 16, 2025 11:13 PM
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார், 25, தன்வீர், 20 மற்றும் சின்டுயாதவ், 22, என்ற பெண் ஆகியோர் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் காவலர் பணியில் சேர தேர்வாகினர்.
மூவரும், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் பயிற்சியில் சேர்ந்தனர்.
இவ ர்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, அசாம் மாநிலத்திற்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், மூவரும் இருப்பிடச்சான்று போலியாக கொடுத்தது தெரிந்தது.
சர்வன்குமார், தன்வீர், சின்டுயாதவ் ஆகியோர் மீது தக்கோலம் போலீசில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ராகேஷ் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தக்கோலம் தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் இருந்து தற்போது வரை, போலி சான்று கொடுத்து காவலர் பயிற்சியில் சேர்ந்தது தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட புகார்கள், தக்கோலம் போலீசுக்கு வந்துள்ளது.