/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மன வளர்ச்சி குன்றிய மகனுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை
/
மன வளர்ச்சி குன்றிய மகனுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை
மன வளர்ச்சி குன்றிய மகனுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை
மன வளர்ச்சி குன்றிய மகனுடன் கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை
ADDED : அக் 16, 2025 01:57 AM
வாலாஜா: வாலாஜா அருகே, மன வளர்ச்சி குன்றிய மகனின் நிலையால், விரக்தியடைந்த ஐ.டி., ஊழியர், மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜா, காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர், 32, ஐ.டி., ஊழியர். இவரது மகன் யாஷோ, 6, பிறந்ததில் இருந்தே மனவளர்ச்சி குன்றிய குழந்தை.
நேற்று முன்தினம் தன் மகனுடன் வீட்டை விட்டு சுரேந்தர் வெளியே சென்றார்; இரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த மனைவி, பல இடங்களில் தேடினார், கிடைக்கவில்லை.
இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள வெங்கடாபுரம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தந்தை, மகன் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. ச ம்பவ இடத்திற்கு வாலாஜா போலீசார் விரைந்தனர். கிணற்றில் மிதந்த இரு உடல்களையும் மீட்டனர்.
சுரேந்தர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் மகன் மன வளர்ச்சி குன்றி, பேச முடியாத நிலையில் உள்ளான்.
'இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்கிறோம்' என இருந்தது. அந்த கடிதத்தை வாலாஜா போலீசார் கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.