/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கரில் பக்தர்கள் தங்கும் இல்லம் கட்டுமான பணி தீவிரம்
/
சோளிங்கரில் பக்தர்கள் தங்கும் இல்லம் கட்டுமான பணி தீவிரம்
சோளிங்கரில் பக்தர்கள் தங்கும் இல்லம் கட்டுமான பணி தீவிரம்
சோளிங்கரில் பக்தர்கள் தங்கும் இல்லம் கட்டுமான பணி தீவிரம்
ADDED : நவ 27, 2024 10:03 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள், சோளிங்கர் நகரில் தங்கியிருந்து தினசரி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் இரண்டு, நான்கு அல்லது 6 வாரம் என தங்கி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.,
இவர்கள், தங்குவதற்கு ஏதுவாக, சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் பங்களிப்புடன் 2.46 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்கள் தங்குவதற்கான இல்லம் கட்டப்பட்டு வருகிறது.
யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு செல்லும் ரோப்கார் வளாக பாதையில் இந்த இல்லம், கட்டப்பட்டு வருகிறது. இதில், 10 தனித்தனி குடியிருப்புகள், அலுவலகம், தியான மண்டபம் மற்றும் நந்தவனம் உள்ளிட்டவற்றுடன் 0.89 ஏக்கர் பரப்பளவில் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.