/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் மலைக்கோவிலில் கார்த்திகை உற்சவம் படி நெடுக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

ADDED : டிச 09, 2024 02:14 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்தில் நரசிம்ம சுவாமி, யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்மருக்கு எதிரே சிறிய மலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். யோக நிலையில் உள்ள நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களின் வேண்டுதலை, அனுமன் கேட்டு நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
தவ நிலையில் உள்ள யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால், கார்த்திகை மாதத்தில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.
கடந்த மாதம் 17ம் தேதி துவங்கிய கார்த்திகை உற்சவத்தில் நேற்று, கார்த்திகை நான்காம் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி சிறப்பு உற்சவம் நடைபெற்றது. 1,305 படிக்கொண்ட பெரியமைலையில், பக்தர்கள் படி நெடுக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சோளிங்கரில் உற்சவர் பக்தோசித பெருமாள் கோவிலிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.