/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சுவர் இடிந்து முதியவர் பலி; 4 நாட்களுக்கு பின் உடல் மீட்பு
/
சுவர் இடிந்து முதியவர் பலி; 4 நாட்களுக்கு பின் உடல் மீட்பு
சுவர் இடிந்து முதியவர் பலி; 4 நாட்களுக்கு பின் உடல் மீட்பு
சுவர் இடிந்து முதியவர் பலி; 4 நாட்களுக்கு பின் உடல் மீட்பு
ADDED : டிச 17, 2024 07:16 AM
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 52; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள், 47. தம்பதிக்கு இரு மகன்கள். கருத்து வேறுபாடால் 15 ஆண்டுகளாக பாஸ்கரன் தனியாக வசித்தார்.
கடந்த 11 மற்றும் 12ல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது பாஸ்கர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பாஸ்கரன் தலை நசுங்கி பலியானார்.
பாஸ்கரன் தனியாக வசிப்பதால், எப்போது வந்து, செல்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தினர் யாரும் இந்த விபத்தை கவனிக்காத நிலையில், நான்கு நாட்களுக்கு பின் நேற்று முன்தினம், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. காவேரிப்பாக்கம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சுவர் இடிபாடுகளில் சிக்கி, உடல் அழுகிய நிலையில் இருந்த பாஸ்கரன் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.