/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
'லஞ்ச' மின் வாரிய போர்மேன் 'சஸ்பெண்ட்'
/
'லஞ்ச' மின் வாரிய போர்மேன் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 04, 2024 04:33 AM
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய போர்மேன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மின்னல் பகுதி உதவி மின் பொறியாளர் அலுவலக போர்மேன் கிருஷ்ணன், 59; மேல்ஆவதம் பகுதி விவசாயி சற்குணத்திடம், உயரழுத்த மின் கம்பியை மாற்ற, லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத அவர், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி கடந்த, 29ம் தேதி பணம் கொடுத்தபோது, டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணனை கைது செய்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணனை, 'சஸ்பெண்ட்' செய்து, வேலுார் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.