/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் - சென்னை வரை மின் ரயில் இயக்க எதிர்பார்ப்பு
/
சோளிங்கர் - சென்னை வரை மின் ரயில் இயக்க எதிர்பார்ப்பு
சோளிங்கர் - சென்னை வரை மின் ரயில் இயக்க எதிர்பார்ப்பு
சோளிங்கர் - சென்னை வரை மின் ரயில் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 09, 2024 09:35 PM
சென்னை:அரக்கோணம் சந்திப்பு அடுத்த சோளிங்கரில், புகழ்பெற்ற நரசிம்மர் கோவில் உள்ளது. அருகிலேயே, ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியரை தரிசித்து செல்கின்றனர்.
சோளிங்கரில், போதிய ரயில் வசதி இல்லாததால், பயணியர் அரக்கோணம் சென்று, அங்கிருந்த பேருந்து, ஆட்டோக்களில் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்களை, சோளிங்கர் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, அடுத்த ஆண்டு ஜன., மாதத்தில் வரும் புதிய கால அட்டவணையில் அறிவிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'அரக்கோணம் அடுத்த சோளிங்கருக்கு, மின்சார ரயில்களின் சேவை நீட்டிப்பது குறித்து, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றனர்.